Videos | வீடியோக்கள்
வேட்டைக்கு ரெடியான ஆண்டவர்.. No.1 ட்ரெண்டிங்கில் பிக் பாஸ் சீசன் 6 வீடியோ

அதிக ரசிகர்கள் பார்க்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். பழமொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக முடிந்து பிக் பாஸ் ஆறாவது சீசனை எதிர்நோக்கி காத்திருந்தது.
எப்போதும் போல் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 6 இல் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த அறிவிப்பை பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு பாய் அறிவித்திருந்தார்.
Also Read :பிக் பாஸ் சீசன் 6 உறுதியான 11 போட்டியாளர்கள்.. ஏஜெண்ட் விக்ரமுக்கு இவ்வளோ கோடி சம்பளமா?
மேலும் கடந்த ஐந்து சீசன்களாக உலக நாயகன் கமலஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கமல் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது.
அதன் பின்பு கமலுக்கு பதிலாக சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. அதுமட்டுமின்றி தற்போது கமல் முழு வீச்சாக பட வேலைகளில் செயல்பட்டு வருகிறார்.
Also Read :வனிதாவை தொடர்ந்து புருஷனை விவாகரத்து செய்த பிக் பாஸ் நடிகை.. சுதந்திரம் பறி போனதால் எடுத்த முடிவு
இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கமலஹாசன் வேட்டையை ரெடியா என்ற டயலாக்கை பேசுகிறார். இதிலிருந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஐந்து சீசன்களில் இல்லாதவாறு பல புதிய அம்சங்கள் இந்த சீசனில் இடம்பெறவுள்ளது. இந்த வருடம் பிக் பாஸ் தாமதமாக தொடங்கப்பட்டாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக அமைய உள்ளது. இந்த 6வது சீசன் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read :பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆயிரம் கோடி சம்பளம் கேட்கும் பிரபலம்.. அண்ணாந்து பார்க்கும் திரையுலகம்
