பிக்பாஸில் அடிதடி சண்டை.. ஐக்கியை கடித்த பாவனி, என்ன ஒரு கொலைவெறி சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 இல் இன்றைய எபிசோடில் தலைவர்கான போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான டாஸ்க் செண்பகமே செண்பகமே. 14 பேர் உள்ள பிக் பாஸ் வீட்டில் முதல் ஏழு பேர் ஆரஞ்சு அணியிலும், மற்ற ஏழு பேர் நீலநிற அணியிலும் விளையாடுகிறார்கள்.

இந்த இரு அணிகளுக்கும் நிறைய பாட்டில்கள் கொடுக்கப்படுகிறது. பிக் பாஸ் இன் கார்டன் ஏரியாவில் ஒரு பொம்மை மாடு நிற்க வைக்கப்படுகிறது. அலாரம் அடித்தவுடன் இரு அணிகளும் பாட்டிலில் பாலை நிரப்ப வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட பாட்டில்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பிக்பாஸில் வீட்டில் அலாரம் அடித்தவுடன் இரு அணிகளும் கடுமையாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இமான் அண்ணாச்சி முதலில் ஆரஞ்சு அணியில் உள்ள பால் பாட்டில்களை திருடி விடுகிறார்.

மீண்டும் ஆரஞ்சு அணியிலிருந்து ஐக்கி நீலநிறம் அணியில் உள்ள பாட்டில்களை திருட வரும்போது பவானி ஐக்கியை கடித்து விடுகிறார். அதிலிருந்து சண்டை ஆரம்பித்து பொம்மை மட்டையை கீழே தள்ளி விடுகிறார்கள். கீழே விழுந்த பொம்மை மாட்டை நிற்கவைத்து மீண்டும் அந்த பொம்மை மாட்டை உடைத்து விடுகிறார்கள்

பிக்பாஸ் வீட்டில் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டிருந்த செட்டுகளை உடைத்து நாசமாக்கினார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள். இதனால் இன்றைய கலவரமான எபிசோடை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.