Connect with us

Cinemapettai

நான் ஷிவானியை லவ் பண்ணல.. வாய்கூசாமல் பொய் பேசும் பிக் பாஸ் மன்மதன்!

shivani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் ஷிவானியை லவ் பண்ணல.. வாய்கூசாமல் பொய் பேசும் பிக் பாஸ் மன்மதன்!

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல், காமெடி, அன்பு என நவரசத்தையும் அள்ளித்தரும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன்4 மாறி வருகிறது.

மேலும் இந்த சீசனில் பாலாஜி-ஷிவானி  இருவரும் இடையே காதல் டிராக் அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இதை ரசிகர்களும் சுவாரசியமாக கண்டுகளித்தனர்.

ஆனால் தற்போது பாலாஜி அர்ச்சனாவிடம், ‘நான் ஷிவானியை லவ் பண்ணல’ என்று வாய் கூசாமல் சொல்லியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனா பாலாஜியை அழைத்து ‘நீ  ஷிவானியிடம் நெருங்கிப் பழகுவது மற்றவர்களுக்கு தப்பாக தெரிகிறது, நீங்கள் இருவரும் சேர்ந்தால் எனக்கு சந்தோஷம்தான்.

ஆனால் இந்த பிக்பாஸ் வீட்டில் நீங்கள் பழகுவது மற்றவர்களுக்கு தப்பாக தான் தெரியும். முக்கியமாக ஷிவானியின் பெயர் கெடுவதற்கு நீ காரணமாகாத’ என்று அர்ச்சனா பாலாஜிக்கு விளக்கினார்.

ஆனால் பாலாஜி அர்ச்சனாவிடம் ‘ நான்  ஷிவானியை  விரும்பவில்லை’ என்று பதிலளித்தது அர்ச்சனாவிற்கு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

balaji-archana-cinemapettai

balaji-archana-cinemapettai

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ஷிவானி பாலாஜிக்கு  ஊட்டிவிடுவது என்ன, தனிமையாக அமர்ந்து இருவரும் கொஞ்சுவது என்ன, என பாலாஜி-ஷிவானி இடையே காதல் பத்திக்கிச்சு என்று ரசிகர்கள் கணித்து இருந்த இந்த சூழலில், மன்மதனாக மாறிவிட்டார் பாலாஜி என்று பிக்பாஸ் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top