Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ்-3 தொகுப்பாளர் யார் தெரியுமா? விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரம்மாண்டம்

பிக்பாஸ் 1, பிக் பாஸ் 2 அந்த வரிசையில் தற்போது பிக் பாஸ் 3 சீசன் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது தமிழ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன். இவர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் எதிர்மறையான விமர்சனங்களும் இந்த நிகழ்ச்சியால் சந்திக்கவும் நேர்ந்தது. ஆனால் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதாகவும் அரசியலில் ஈடுபட்டதால் இவரால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்போது இந்தியன் 2 படம் டிராப் ஆகிவிட்டது மற்றும் தேர்தலும் முடிவடைந்துள்ளது.
அதனால் மீண்டும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என பலரும் கூறி வந்த நிலையில், தற்போது கமலஹாசன் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் இந்த நிகழ்ச்சிக்கான promo படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் ப்ரோமோஷன் வெளியாகும் எனவும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூனில் தொடங்கும் என்றும் கூறி வருகின்றனர்.
