வாழ்க்கை வாடி போற மாதிரி இருந்தா என்ன கூப்பிடு.. அர்ச்சனாவிற்கு திடீர் ட்விட் செய்த மாயா

Bigg Boss Maya tweeted to Archana: ‘ஆண்டவரே என் பக்கம் அப்ப, டைட்டிலும் எனக்கு தான்’ என மிதக்கத்தில் இருந்த மாயாவிற்கு அர்ச்சனா, பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் சோசியல் மீடியாவில் அவர் பதிவிடும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்புகிறது. ஏற்கனவே இன்ஸ்டா ஸ்டோரியில், ‘டிராபியை பணம் கொடுத்து கூட வாங்கலாம். ஆனால் அன்பை வாங்க முடியாது. அதை நான் வாங்கிவிட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதோடு இப்போது அவர் எக்ஸ் தளத்தில் அர்ச்சனாவிற்கு ட்விட் செய்தது பரபரப்பாக பேசப்படுகிறது. அதில், ‘டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கை போகப் போகுது. செடி வாடி போற மாதிரி இருந்தா என்ன கூப்பிடு, நான் வந்து தண்ணி ஊத்துறேன். எப்போதுமே உன்னுடன் இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன்’ என்று அர்ச்சனாவின் புகைப்படத்துடன் ட்விட் செய்திருக்கிறார்.

அதோடு ‘பூப்பூக்கும் நண்பா’ என்றும் ஹேஷ் டேக்கையும் இணைத்துள்ளார். இதைப் பார்க்கும்போது நிச்சயம் மனசார வாழ்த்து தெரிவிப்பது போல் இல்லை. பழிப்பது போல் புகழ்வதும், புகழ்வது போல் பழிப்பதுமான வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்கிறது. ஏற்கனவே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு உச்சகட்ட விரக்தியில் இருக்கிறார் மாயா.

Also Read: விரக்தியில் மனக்குமுறலை கொட்டி தீர்க்கும் பிக் பாஸ் மாயா.. இன்ஸ்டா-வில் போட்ட பதிவு

அர்ச்சனாவிற்கு ட்விட் செய்த மாயா

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்க்கிறார். மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கூட அக்ஷயா, ஐசு, பூர்ணிமாவுடன் இணைந்து கட்டிப்பிடித்த மாதிரி இருந்த புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன், ‘கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்போது ட்விட்டர் பக்கத்திலும் அர்ச்சனாவிற்கு வாழ்த்து தெரிவிப்பது போல், அவர் மீது இருக்கும் வெறுப்பை கக்கி இருக்கிறார். இந்த சீசனில் ஆண்டவரின் சப்போர்ட் மாயாவிற்கு தான் அதிகமாக இருந்தது. ஆனால் அழுது அழுதே ஆடியன்சை கவிழ்த்த அர்ச்சனாவை சுலபமா எடை போட்டோமே என்று மாயா இப்போது எண்ணுகிறார்.

மாயா ட்விட்

maya-twit-cinemapettai
maya-twit-cinemapettai

Also Read: டைட்டில் வின்னரானது விஜய் டிவியால் தான்.. முதல் பேட்டியிலேயே மொத்தத்தையும் உளறிய அர்ச்சனா

- Advertisement -spot_img

Trending News