புதன்கிழமை, நவம்பர் 13, 2024

20 நாட்களாக நடித்த போட்டியாளர்களை தட்டி எழுப்பிய பிக் பாஸ்.. பவித்ரா சுனிதாவுக்கு இடையே கொளுத்தி போட்ட குருநாதர்

Vijay tv bigg boss 8 Tamil: பிக் பாஸ் 8 சீசன் ஆரம்பித்து 20 நாட்கள் ஆகியும் பெருசாக சொல்ற மாதிரி சண்டை சச்சரவுகள் இல்லாமல் உப்பு சப்பு இல்லாமல் போட்டியாளர்களின் உண்மையான முகத்தை காட்டாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிரடியாக முடிவு எடுத்த பிக் பாஸ் இனிமேல் நம் ஆட்டத்திற்குள் இறங்கி விட வேண்டும் என்று பெண்கள் மற்றும் ஆண்கள் அணியை ஒன்றாக கோர்த்து விட்டது. அதாவது நடந்து முடிந்த ஹோட்டல் டாஸ்க்கில் யார் பெஸ்ட் பெர்பார்மன்சை கொடுத்த போட்டியாளர்கள். யார் ஒஸ்ட் ஆக விளையாடினார் என போட்டியாளர்களை பிரித்து விட்டது.

அந்த வகையில் சிறப்பாக விளையாடியதில் அருண், தர்ஷா, ரஞ்சித், முத்துக்குமரன், தர்ஷிகா, பவித்ரா மற்றும் சுனிதா. அடுத்ததாக நல்லாவே விளையாடவில்லை என்ற லிஸ்டில் சத்யா, ஆனந்தி, ஜாக்லின், அன்சிகா, சச்சனா, தீபக், விஷால், சௌந்தர்யா. இதை சொல்வதோடு மட்டும் நிப்பாட்டாமல் சிறப்பாக விளையாடியதில் சிறந்த மூன்று பேர் என தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

அதில் முதலாவதாக முத்துக்குமரன், ரஞ்சித் மற்றும் பவி என பெயர் சொல்லி நீங்கள் சிறப்பாகவும் விளையாடினார்கள். அதே நேரத்தில் மொக்கையாகவும் இருந்தது என்று சொல்லி இரண்டுக்கும் நடுவில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த வகையில் மூன்றாவது இடத்தில் நீங்கள் இல்லை சுனிதா தான் என்று பவித்ராவை அசிங்கப்படுத்தும் அளவிற்கு குருநாதர் கொளுத்தி போட்டு விட்டார்.

இதற்கு பேசாமல் மூன்றாவது இடத்தில் சுனிதா என்ற பெயரை சொல்லி அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் எதற்காக பவித்ராவை தாக்கும் அளவிற்கு பேசி சுனிதாவை தூக்கி விட்டார் என்பதற்கான காரணம் இரண்டு பேருக்கும் நடுவில் முட்டிக்கொண்டு மோத வேண்டும் என்பதுதான். அப்படியாவது சுவாரஸ்யமாக இருக்காதா என்ற ஒரு ஏக்கத்தில் குருநாதர் வச்சு செய்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து நல்லாவே விளையாடவில்லை என்று சௌந்தர்யா மற்றும் தீபக்கை சொன்னதும் இவர்கள் முகமே வாடிப் போய்விட்டது. ஆனால் சத்யா இதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இதன் பிறகு பவித்ரா விளையாட்டு சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் இந்த மாதிரியான காரியத்தில் இறங்கி இருக்கிறார். ஏனென்றால் பவித்ராவுக்கு அந்த அளவிற்கு திறமையும் புத்திசாலித்தனமும் இருக்கிறது.

அதனால் அதை தூண்டிவிட்டு வீட்டுக்குள் பூகம்பமாக வெடிக்க வேண்டும் என்பதற்காக குருநாதர் கொளுத்தி போட்டு விட்டார். மேலும் இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்றால் பவித்ரா டேஞ்சர் சோன் ஆகிவிட்டால் நாமினேஷன் பிரீ பாஸில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்று தந்திரமாக நடக்கும் சூழ்ச்சியாக கூட இருக்கலாம்.

- Advertisement -spot_img

Trending News