Politics | அரசியல்
போ போ… உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ.. கமலை கலாய்த்த பிரபலத்திற்கு சரியான பதிலடி கொடுத்த ரசிகர்கள்

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் ரிசல்ட் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டது இதில் பெருவாரியான இடங்களில் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தான் வெற்றி பெற்று தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.
அதேபோல் பல இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்றாலும் பாஜக தமிழ்நாட்டில் மட்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை, இந்தத் தேர்தலில் புதுவரவாக கமலஹாசன் களமிறங்கினார், பாஜக தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலஹாசனும் ஒரு காரணம் என்று கூறலாம்.
கமலஹாசன் நின்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வி என்றாலும் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்து விட்டார், இப்படி ஒரு ஆண்டிலேயே தனக்கான இடத்தை நிரூபித்துவிட்டார் கமலஹாசன், இதே போல் அடுத்தடுத்து தேர்தலில் போட்டியிட்டால் மிக விரைவில் வெற்றியும் அடைந்து விடுவார் என அனைவரும் கருத்து கூறுகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல இயக்குனரான cv குமார் கமலஹாசன் தோற்றத்தை வைத்து ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது” போ… போ… எல்லாம் முடிஞ்சருச்சு போ. உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ..” என கூறியுள்ளார் இதற்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
