ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கமல் இல்லாமல் சொதப்பிக்கொண்டு வரும் பிக் பாஸ்.. தேசிய கொடியை மறைத்ததற்கான காரணம் இதுதான்?

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே ஏகப்பட்ட குளறுபடிகளை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் தற்போது இல்லாததால் விஜய் டிவி இந்த பொறுப்பை விஜய் சேதுபதியிடம் ஒப்படைத்தது. ஆனால் விஜய் சேதுபதி என்னதான் எதார்த்தத்தை சுட்டிக்காட்டினாலும் அனுபவ ரீதியாகவும், போட்டியாளர்களின் தன்மையை சோதிக்கும் அளவிற்கு கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வது போல் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் அமரன் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் போயிருக்கிறார். பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஏதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷன்கள் பண்ண வேண்டும் என்றால் செலிப்ரட்டிகள் உள்ளே போவது வழக்கம்தான். அந்த மாதிரி இந்த முறை அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் போயிருக்கிறார்.

போனதும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை சந்தித்து பேசி அமரன் படத்தையும் அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதையும் விளக்கும் விதமாக மறைந்த முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜன் பற்றி சில விஷயங்களை சொல்லி இப்படத்தின் ட்ரெய்லர் போட்டு காட்டப்பட்டிருக்கிறது. இப்படி பேசி முடித்த நிலையில் கடைசியாக அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு தேசியக்கொடி பொருத்தப்பட்டு பேட்ஜ் கொடுக்கப்பட்டு அதை அனைவரும் அணிந்து கொண்டார்கள்.

அதே மாதிரி சிவகார்த்திகேயனும் அந்த பேட்ஜ் அணிந்து மரியாதை செலுத்தினார். ஆனால் அப்படி காட்டும் போது அந்த தேசியக்கொடி பிளர் செய்யப்பட்டிருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் குழம்பிப்போய் ஏன் தேசியக் கொடியை மறைக்க வேண்டும், ஏன் பிளர் பண்ணியிருக்கிறார்கள் என்று பல கேள்விகள் எழும்பி வந்தது. இதற்கு விளக்கம் சொல்லும் விதமாக விஜய் சேதுபதி இன்று பதில் சொல்வாரா என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்த வீட்டில் ஏன் தேசியக் கொடி மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்னவென்று வெளியாயிருக்கிறது. அதாவது தேசிய கொடியை, குடியரசு மற்றும் சுதந்திர நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் வணிகம் மற்றும் இதர நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. அத்துடன் தேசிய கொடியின் வடிவத்தை மாற்றவும் கிடையாது.

அதனால் நேற்று வட்ட வடிவமாக இருந்த கொடியை பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எந்தவித முன் யோசனை எதுவும் இல்லாமல் பிக் பாஸ் டீம் ஆர்வக்கோளாறில் அவசரமாக கொடியை கொடுத்து அனுப்பி விட்டார்கள். பின்பு அதை மறைப்பதற்காக பிளர் பண்ணியிருக்கிறார்கள்.

ஒருவேளை அப்படி பிளர் பண்ணாமல் விட்டிருந்தால் இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கும். அத்துடன் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே இந்த பிரச்சினையில் சிக்கி இருப்பார்கள். நல்லவேளை இரண்டு பேருமே எஸ்கேப் ஆகி தேவையில்லாத கொடி அவமதிப்பு பிரச்சனையிலிருந்து தப்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் கமல் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்திருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஏனென்றால் அவருக்கு தெரியாத விஷயங்களை கிடையாது. அதனால் கமல் இல்லாமல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சொதப்பிக் கொண்டு வருகிறது. இன்று விஜய் சேதுபதி இதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News