பிக்பாஸ் வரலாற்றையே மாற்றப் போகும் டைட்டில் வின்னர்.. காரணத்தோடு உறுதியாக சொல்லும் வெளியேறிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் சுவாரசியமாக பார்க்கப்பட்டாலும் இடையில் சில பல விமர்சனங்களை சந்தித்தது. தற்போது 65 நாட்களை கடந்து இருக்கும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவராத போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர்.

அதில் சில எதிர்பாராத எலிமினேஷன் நடைபெற்றிருந்தாலும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையான போட்டியாளர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் இந்த பிக் பாஸ் டைட்டிலை தட்டி செல்லக்கூடிய தகுதி விக்ரமன், அசீம் உள்ளிட்ட வெகு சிலருக்கு மட்டுமே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

இந்நிலையில் இந்த சீசனின் வெற்றியாளர் இவர்தான் என்று கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா மிகவும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். தற்போது சோசியல் மீடியா சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் ஆயிஷா இந்த பிக் பாஸ் டைட்டிலை சிவின் தான் நிச்சயம் கைப்பற்றுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே சிவின் தன்னுடைய விளையாட்டை மிகவும் நேர்த்தியாகவும் கவனமாகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை ஏறி மிதித்து தன்னுடைய விளையாட்டை அவர் விளையாடியதில்லை என்றும் தன்னுடைய கருத்தை நேர்த்தியாகவும் கவனமாகவும் முன்வைப்பார் என்றும் ஆயிஷா தெரிவித்துள்ளார்.

Also read: 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

ஒருவகையில் அவர் கூறியது முற்றிலும் உண்மையே. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் சிவின் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் பப்ளிசிட்டிக்காக ஒருபோதும் அவர் யாரிடமும் தேவையில்லாமல் சண்டை போட்டது கிடையாது. ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காகவே தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட சிலர் தேவையில்லாமல் கத்தி சண்டை போட்டு ஆண்டவரிடம் திட்டும் வாங்கி இருக்கின்றனர்.

அப்படி இருக்கும்போது சிவின் மட்டும் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய விளையாட்டை நேர்மையாக விளையாடி கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இத்தனை வாரங்களில் அவர் ஒரு முறை கூட நாமினேஷனில் சிக்கியது கிடையாது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்செல்லும் அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் பிக் பாஸ் வரலாற்றிலேயே இது தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: மீண்டும் சீல் வைக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கதை இல்லனா சீரியலை இழுத்து மூடுங்க விஜய் டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்