Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேமராவை பொண்டாட்டியா நெனச்சுச்சிட்டாரு.. உத்து பாக்காத மாமா வெட்கமா இருக்கு! மரண ஓட்டு ஓட்டும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
அந்த வகையில் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்தே பெரிதும் பேசப்படும் ஒரே நபர் மொட்ட பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி.
இவர் அப்பப்ப கேமரா முன்னாடி போயி பொண்டாட்டி கிட்ட பேசுற மாட்டான் ஃபீலிங்ஸ்ச ஷேர் பண்றதையும், லுக்கு விடுவதையும் பார்க்கும் நெட்டிசன்கள் ‘உத்து பாக்காத மாமா வெட்கமா இருக்கு’ என்று மரண ஓட்டு ஓட்டுகின்றனர்.
மேலும் இந்த வார எவிக்சன் பிராசஸிங் நடைபெற்ற பிறகு நாமினி லிஸ்டில் இருந்த சுரேஷ் கேமராவைப் பார்த்து “அய்யய்யோ நீ ரொம்ப வெஷமோ” என்று கொஞ்ச ஆரம்பிச்சிட்டாரு.
எனவே பிக் பாஸ் வீட்டில் மொட்டை கொளுத்தி போடுவதிலும், அதிலே குளிர்காயும் கெட்டிக்காரன் ஆனால் அர்ச்சனா வீட்டுக்குள் நுழைந்த நாளிலிருந்து அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டாரு.
ஆனா அத ரொம்ப நாளா கன்டினியூ பண்ண முடியல தற்போது மீண்டும் வெடிக்க தொடங்கிவிட்டார். நேற்று சனம் ஷெட்டியை, ஒரு சின்ன பாத்ரூம் சண்டைல “வகுந்து கைல கொடுத்து விடுவேன்” என்று ஆக்ரோசமாக விரட்டினார். அதன்பின் அந்த சண்டை பற்றி கேமரா ஓட தனியா பேச ஆரம்பிச்சிட்டாரு.
அப்பப்ப கேமராவை விரட்டுவதும் கொஞ்சுவதும் வழக்கமா இருக்குற மொட்ட பாஸ்சை நோட் பண்ற நெட்டிசன்கள் அதை வச்சு சமூக வலைதளங்களில் பங்கம் செய்து வருகின்றனர்.

big-boss-1
