புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் சேதுபதியின் பேச்சுக்கு முட்டுக்கட்டை போட்ட பிக் பாஸ்.. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஜய் டிவி

Vijay Tv Bigg Boss 8 Tamil: சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவி தான் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. அதற்கு காரணம் ஒருவகையில் சீரியலாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ரியாலிட்டி ஷோ மூலம் தொடர்ந்து மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருவதால் விஜய் டிவிக்கு என்று ஒரு தனித்துவமான இடம் கிடைத்துவிட்டது. அதிலும் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற இரண்டு நிகழ்ச்சிகளுமே மக்களை அதிக அளவில் மகிழ்வித்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்ததால் மக்கள் அப்பொழுது எதிர்மறையான விமர்சனங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிரச்சினை பூகம்பமாக வெடித்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது கமல் தொகுத்து வழங்க முடியாது என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில் இவர்களுக்கு அடுத்து வேறு யார் தொகுத்து வழங்குவார் என்று பல கேள்விகள் எழும்பியது.

அதன் பின் விஜய் டிவி எடுத்த அதிரடியான முடிவு தான் விஜய் சேதுபதியை தொகுத்து வழங்க வைத்தது. ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் பேச்சு மக்களை கவர்ந்திருந்தாலும் போகப் போக ஏகத்தாளமான பேச்சு அதிகரித்தே போனதால் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்து விட்டது. அத்துடன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் பெரிசாக சொல்லும் அளவிற்கு விறுவிறுப்பாக கொண்டு வரவில்லை.

அதனால் ஆறு போட்டியாளர்கள் புதிதாக உள்ளே இறங்கி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த விஜய் சேதுபதி இதுவரை பேசிய பேச்சுக்கு கொஞ்சம் தன்னடக்கத்துடன், இனி அடக்கி தான் வாசிக்க வேண்டும் என்பதற்கேற்ப பார்த்து பேசினார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு கொடுத்த அறிவுரை என்னவென்றால் நாங்கள் என்ன சொல்கிறமோ அதை மட்டும் பேசினால் போதும் என்பதற்கு ஏற்ப பிக் பாஸ் சொல்வதைக் கேட்டு அதை தான் விஜய் சேதுபதி பேசுவது போல் அப்பட்டமாக தெரிந்தது. அதனால் தான் வார்த்தையில் நிறைய தடுமாற்றங்கள் ஏற்பட்டது

இதுவரை விஜய் சேதுபதி பேசிய பேச்சுக்களில் இந்த முறை பேசிய பேச்சில் நிறைய வித்தியாசங்களும் கொஞ்சம் பணிவும் இருப்பது போல் தெரிந்தது. ஆனாலும் இன்னும் விஜய் சேதுபதியின் எதார்த்தமான பேச்சுக்கு முட்டுக்கட்டை போட்டு தொடர்ந்து பிக்பாஸ் கொடுக்கும் அறிவுரைகளை மட்டும் தான் இனி பேசப்போகிறார். எதார்த்தமான பேச்சுக்கள் என்றாலும் மேடைக்கான தனித்துவமான ஒரு பேச்சுக்கள் இருக்கிறது அதை விஜய் சேதுபதி ஃபாலோ பண்ண தவறிவிட்டார்.

இப்படியே போனால் விஜய் டிவி மொத்தமாக தோல்வியை சந்தித்து விடும் என்பதால் விஜய் டிவி, விஜய் சேதுபதியின் எதார்த்தமான பேச்சுக்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது. இனி பிக் பாஸ் என்ன சொல்கிறதோ அதுப்படி தான் விஜய் சேதுபதி பேசப் போகிறார்.

- Advertisement -

Trending News