Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் குழம்பிப்போன உறவுகள்.. ரம்யாவுடன் ஜோடி போட்ட பிரபலம்.. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிக்கும் சிவானிக்கும் லவ் ட்ராக்கை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர்.
மேலும் பாலாஜியும் சிவானியும் நாளுக்கு நாள் நெருக்கமாக பழகி கொண்டிருக்கின்றனர். என்னதான் பாலாஜி சிவானி மீது காதல் இல்லை என்று கூறினாலும் அவர்களது ரொமான்ஸ்க்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியனுக்கும் சோமுவுக்கும் இடையே லவ் ட்ராக்கை தொடங்கி வைத்திருக்கிறார் பிக்பாஸ். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கில் சோமுவும் ரம்யா பாண்டியனும் அர்ச்சனாவின் இளைய மகன் மற்றும் மருமகள் என்று கூறினார் பிக்பாஸ். இதனால் நேற்றைய எபிசோடில் அவ்வப்போது ரம்யா பாண்டியனுக்கும் சோம சேகருக்கும் இடையே ரொமான்ஸ் வழிந்தோடியது.
இதனைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பலர், ‘மாமா வேலைய மட்டும் மறக்கிறதே இல்ல போலவே பிக் பாஸ்..’ என்று சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டலடித்து வருகின்றனர்.
