பிக்பாஸில் கலந்துகொள்ளும் தனுஷ், ஸ்ருதி ஹாசன், கார்த்திக், காஜல் அகர்வால்.! தமன்னா அதிரடி பதில்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலமானது இந்த நிகழ்ச்சி ஹிந்தி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகிறது, அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திரங்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

அதே போல் தமிழில் இரண்டு வருடமாக ஒளிபரப்பப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி கண்டது, மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் பட வாய்ப்பு அதிகமாகி சினிமாவில் பிரபலமாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தமன்னாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நீங்கள் பணியாற்றினால் போட்டியாளர்களாக யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு தமன்னா தனுஷ், ஸ்ருதி ஹாசன், கார்த்தி, விஷால், காஜல் அகர்வால் ஆகிய பிரபலங்களை கூறினார்.

Leave a Comment