புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! வாயால் கெட்டது தான் மிச்சம்

Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஐந்தாவது வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மற்ற சீசன்களை காட்டிலும் இந்த எட்டாவது சீசன் பெரிய அளவில் மக்களை சுவாரஸ்ய படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீதும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த முறை ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக என விளையாட விட்டதால்தான் சுவாரஸ்யம் குறைந்து விட்டதாகவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்காக அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள்.

வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்

மேலும் புதிதாக வீட்டிற்குள் வந்த சிவகுமார், மஞ்சரி, ராணவ், ரியா, வர்ஷினி வெங்கட், ரயான் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது என ஏற்கனவே பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஓட்டுக்கள் முடிந்த நிலையில் ஆர் ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தார்கள்.

இதில் சாச்சனா வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்த போது முதல் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் என்று சொல்லி சாச்சனா வெளியேற்றப்பட்டார் மீண்டும் சர்ப்ரைஸ் ஆக சாச்சனா உள்ளே வந்தபோது அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தாலும் தவளை தன் வாயால் கெடும் என்பது போல் பேசிப் பேசி மொத்தமாக கெடுத்துக் கொண்டார் சாச்சனா.

- Advertisement -

Trending News