Tamil Cinema News | சினிமா செய்திகள்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி.!
Published on
விஜய் தொலைக்காட்சி டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடிக்க பல சீரியல்களையும், ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள், அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.
கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது, இந்தச் சீசனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் சில promo வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தினார்கள், மேலும் மீண்டும் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்கள் விஜய் டிவி. ஆம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்ற தகவலை அறிவித்துள்ளார்கள்.
