Connect with us

Cinemapettai

bigg-boss-3

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3ல் கலந்து கொள்ளும் இரண்டு முக்கிய பிரபலங்கள்.. அடுத்த ஜூலி வந்துட்டாங்க

பிக் பாஸ் 3 சீசன் விரைவில் தொடங்க உள்ளனர். அதனால் தற்போது பிக் பாஸில்  கலந்துகொள்ளும் பிரபலங்களின் அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகியுள்ளது. இதோ அந்த இரண்டு பிரபலங்கள்.

அனைத்து தொலைக்காட்சி ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பது பிக் பாஸ் 3. இதன் முந்தைய இரண்டு பிக் பாஸ் களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் பிக்பாஸ் 3 சீசன் தொகுத்து வழங்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

சில நாட்களாக பிக்பாஸில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் சில பிரபலங்கள் பிக்பாஸில் கலந்து கொள்ள தயங்குகின்றனர். எந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியால் பேரும் புகழும் கிடைக்கிறதோ, அதே அளவிற்கு சிலருக்கு அவமானமும் கிடைக்கிறது. அதனால் சில பிரபலங்கள் பிக் பாஸை தவிர்த்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடியின் மூலம் பிரபலமடைந்த மதுமிதா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. மேலும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா பிக்பாஸில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top