fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.

bigg-boss-3-contestant

News | செய்திகள்

பிக் பாஸ் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்.. சரியான ஆட்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அனைத்து தொலைகாட்சி ரசிகர்களும் காத்திருப்பது பிக் பாஸ் 3. இந்த நிகழ்ச்சி வரும் 23ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது பிக்பாஸ் 3யில் கலந்து கொள்ளும் பிரபலங்களாக இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

சாந்தினி

சிந்து பிளஸ் டூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாந்தினி. அதன்பிறகு அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை தற்போது இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிருணாளினி

டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான மிருணாளினி. கடைசியாக தியாகராஜன் இயக்கத்தில் வந்த சூப்பர் டீலக்ஸ் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரும் பிக் பாஸ் உள்ளதாக இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கஸ்தூரி

இவர் இணையதளத்தில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வைத்து பிக்பாஸில் நுழைந்தால் சர்ச்சைகள் பெறுவார் அதனால் பிக்பாஸ் ஹிட்டடிக்கும் எனக் கருதி தான் கஸ்தூரிஅழைத்திருப்பார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

கிரிஷ்

சினிமாவில் பின்னணி பாடகராக இருப்பவர் கிரிஷ். இவர் சங்கீதாவின் கணவர் என்பது அனைவருக்கும் தெரியும் தற்போது இவரையும் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக இணையதளத்தில் கூறிவருகின்றனர்.

சரண் சக்தி

வடசென்னை படத்தில் தனுஷுக்கு மச்சானாக நடித்திருப்பவர். சரண் சக்தி மக்கள் மத்தியில் பிரபலமாகி கொள்ளலாம் என்பதற்காக தான் கலந்து கொள்வார் என இணையதளத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் இன்னும் பிக் பாஸ் சரண் சக்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா, ராதாரவி, பூனம் பாஜ்வா, விசித்திரா, ரம்யா, ரமேஷ், திலக் இவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் அது இல்லை இதுதான் உண்மை என இன்னொரு லிஸ்ட் வந்துள்ளது. அதில் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நடிகை அபிராமி ,மோகன் வைத்யா, ஜாங்கிரி மதுமிதா, வனிதா விஜயகுமார், பருத்திவீரன் சரவணன், சாண்டி மாஸ்டர், சாந்தினி தமிழரசன், கவின், ஷெரின், தர்சன், பாத்திமா பாபு, சாக்ஷி அகர்வால், சேரன், பவர் ஸ்டார், சரண் சக்தி, முகுன் ராவ்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top