fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாட்டு சாணத்தில் புரட்டியெடுத்த பிக்பாஸ்.. தர லோக்கலாக இறங்கிய வீடியோ

bigg boss

Videos | வீடியோக்கள்

மாட்டு சாணத்தில் புரட்டியெடுத்த பிக்பாஸ்.. தர லோக்கலாக இறங்கிய வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல கடுமையான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முழுவதும் பல டாஸ்க்குகளில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு இன்று வேற லெவல் டாஸ்க் ஒன்று தரப்பட்டுள்ளது.

அதாவது போட்டியாளர்கள் மாட்டு சாணம் நிரப்பப்பட்டுள்ள தொட்டியில் இறங்கி அதில் இருக்கும் நாணயங்களை எடுத்து சேகரிக்க வேண்டும். இதுதான் இன்றைய டாஸ்க். அதில் முதலாவதாக தாமரை, அமீர், அபிநய் மூவரும் தொட்டியில் இறங்குகின்றனர்.

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அதை பார்த்து ரசிக்கின்றனர். அவர்கள் மாட்டு சாணத்திற்குள் கஷ்டப்படுவதை பார்த்து ஒவ்வொருவரும் கைதட்டி சிரிக்கின்றனர்.

இதையெல்லாம் தாங்க முடியாத அமீர் பிக்பாஸிடம் போதும் விட்டுவிடுங்கள் என்று கதறுகிறார். பின்னர் சஞ்சீவ் நடுவராக இருக்கும் ராஜூவிடம் நீங்கள் தான் அந்த நாணயத்தை கையைவிட்டு எண்ண வேண்டும் என்று கலாய்க்கிறார்.

போட்டி ஒருவழியாக முடிவடைந்து ராஜு காயினை பட்டும் படாமலும் கையில் எடுத்துச் சென்று தண்ணீரில் கழுவி எண்ணுகிறார். மாட்டு சாணத்தில் இருந்து வெளியே வந்த தாமரை தன்னை பார்த்து சிரித்த நிரூப்பிடம் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்.

இதனால் நிரூப்பின் ஆடை முழுவதும் மாட்டு சாணமாக காட்சியளிக்கிறது. அதை பார்த்த தாமரை உற்சாகமாக டான்ஸ் ஆடுகிறார். இப்படி ஒரு கலக்கலான ப்ரோமோ சற்று முன்பு வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் இது போன்று மாட்டு சாணத்தில் இறங்கி விளையாடும் டாஸ்க் கொடுப்பது இதுவே முதன்முறை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது போன்ற பல சுவாரஸ்யமான காட்சிகள் வரும் வாரங்களில் அடுத்தடுத்து வர இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top