fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆரம்பிக்கலாமா? பிக் பாஸ் சீசன் 5 லோகோ! முதல் முதலாக வெளியான ப்ரோமோ வீடியோ

biggboss-season-5-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆரம்பிக்கலாமா? பிக் பாஸ் சீசன் 5 லோகோ! முதல் முதலாக வெளியான ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பொழுது போக்கிற்கும், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளது. அதன் விளைவாக இதுவரை நான்கு சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நான்கு சீசனிலும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியது நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஐந்தாவது சீசனிலும் கமல் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு லோகோவை பிக்பாஸ் குழுவினர் அறிமுகம் செய்வார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான லோகோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது. ‘ஆரம்பிக்கலாமா?’ என்ற சிரிப்பு சத்தத்துடன் உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகப்படுத்தும் புரோமோஷனல் வீடியோ ஒன்று, தற்போது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியாகி பட்டையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன்5 போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து உறுதிப்படுத்தும் நிலையில் பிக்பாஸ் குழுவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகையாகவும் திகழும் லட்சுமி ராமகிருஷ்ணன்,

நடிகை ரம்யா கிருஷ்ணன், சீரியல் நடிகை பவானி ரெட்டி ஆகியோர் பிக் பாஸ் சீசன் 5 வில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே யார் யார் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பங்கேற்க போகின்றார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எனத் தொடங்கி உள்ளது.

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி எப்போது தொடங்கும்? போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top