Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. சனம் ஷெட்டிக்கு ஆதரவாக வெளிவந்த தாறுமாறான மீம்ஸ்கள்!

sanam-shetty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. சனம் ஷெட்டிக்கு ஆதரவாக வெளிவந்த தாறுமாறான மீம்ஸ்கள்!

தற்போது விஜய் டிவி தனது டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக ஆயுதமாக பயன்படுத்தி வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4.  இந்த நிகழ்ச்சியின் 63 ஆவது நாளன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் “இப்படி டிசவிங் கன்டஸ்டன்ட்ஸ் எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு மிக்சர் திண்றவனை எல்லாம் உள்ள வச்சுட்டு என்ன சாதிக்கப் போகிறாய்?” என்ற கேள்விகளால் விஜய் டிவியை நெட்டிசன்கள் விலாசி வருகின்றனர்.

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறுவதற்கு முன்பு சக போட்டியாளர்கள் இடம் எடுத்த கணக்கெடுப்பின்படி ‘சனம் ஷெட்டி தான் வீட்டில் இருக்க வேண்டும்!’ என்ற கருத்தை பலர் முன்வைத்த போதிலும், கமலஹாசன் அதனை கருத்தில் கொள்ளவில்லை ஏன்? என்பது போன்ற பல கேள்விகளை பிக்பாஸ் ரசிகர்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

sanam

sanam

மேலும் ஷிவானி நாராயணன், ஆஜித், அனிதா, ரம்யா ஆகியோரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

bb4-memes-cinemapettai

bb4-memes-cinemapettai

ஆனால் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு சனம் ஷெட்டியை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

big-boss4-sanam-cinemapettai

big-boss4-sanam-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top