Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ்ஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. அதிர்ச்சியூட்டும் புரோமோ வீடியோ!
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களை ஈர்த்து வருகிறது.
எனவே நேற்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் கொளுத்திப் போட்டு சுவாரஸ்யத்தை எகிற விட்ட சுரேஷ் சக்கரவர்த்தி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் நோமினேஷன் ப்ராசஸ் நடைபெற இருப்பதால், அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் அஜித், ரம்யா, பாண்டியன், சம்யுக்தா, அர்ச்சனா, சுஜித்ரா கேப்ரில்லா, அனிதா, சிவானி, பாலாஜி என பெரிய லிஸ்டே நாமினேஷனுக்கு தயாராகி உள்ளது.
மேலும் பெண்களுடைய எண்ணிக்கை தான் இந்த நாமினேஷன் லிஸ்டின் அதிகமாக காணப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேரில் யாருக்கு ஓட்டு போடுவது என்று குழப்பத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.
புரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்!
