Tamil Cinema News | சினிமா செய்திகள்
மன்மதனுக்கு யாரை மெயின்டெய்ன் பண்றதுன்னு ஒரே குழப்பம்.. சக்களத்தி சண்டையை மிஞ்சிய பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே போட்டியாளர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடி ரசிகர்களை குஷிப்படுத்ததுகின்றனர்.
மேலும் ‘பாட்டி சொல்லை தட்டாதே!’ என்ற போட்டியின் மூலம் பாலாஜி சிவானியை தங்கச்சின்னு கூப்பிடுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கேப்ரியலாவிற்கும் பாலாஜிக்கும் ஹானஸ்ட் என்ற வார்த்தையால் சண்டை முட்டிக்கிட்டது.
அப்பொழுது சிவானி பாலாஜிகாக கேப்ரியலாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே சிவானி கோபப்பட்டது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனால் சீக்கு வந்த கோழி போல ரொம்ப பாவமா இருக்கிற சுஜித்ராவும் பாலாவுக்காக பொங்கியது கொஞ்சம் ஓவரா தான் இருந்தது.
ஏனென்றால் பாலாஜிகாக சுஜி சோகமாக ஒரு இடத்தில் தனியே அமர்ந்து வருத்தப்பட்டதை பார்த்த பாலாஜி, சமாதானப்படுத்துவதற்காக சென்றபோது, சுஜி இயல்பான நிலையை விட கொஞ்சம் அதிகமாகவே நடித்தார்.
மேலும் இவருடைய நடிப்பு தாங்கமுடியாமல் சிவானி, அந்த இடத்தைவிட்டு கடுப்பா கிளம்பிட்டாங்க..

bala-cinemapettai
எனவே நேற்றைய நிகழ்ச்சியை பார்த்ததும் நெட்டிசன்கள் ‘சுஜியும் சிவானியையும் மாத்தி மாத்தி சமாதானப்படுத்துறத பார்த்தா, யார மெயின்டெயின் பண்றதுன்னு குழப்பத்தில் இருக்கிறாயா பாலாஜி?..’ என்று பாலாவை கிண்டலடித்து வருகின்றனர்.
