Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளில வா பாத்துக்கலாம்.. பிக் பாஸ் வீட்டில் சுசித்ராவை பகிரங்கமாக மிரட்டிய சக போட்டியாளர்!
விஜய் டிவியில் சுவாரசியமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்.
அந்தவகையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டார்.
அப்பொழுது கமலை சந்தித்த சுஜித்ரா திடுக்கிடும் பல உண்மைகளை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜித்தன் ரமேஷ் சுசித்ராவை ‘வெளில வா பாத்துக்கலாம் ..’ என்று மிரட்டல் விடுத்ததை கமலிடம் தெரிவித்தது பிக் பாஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் ரொம்பவே அமைதியாக இருக்கும் ஜித்தன் ரமேஷ் ‘அவர் உண்டு அவர் வேலை உண்டு’ என்று யாருடைய வம்புக்கும் போகாத போது சுஜித்ராவிற்கு இப்படி ஒரு மிரட்டல் விடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விஷயத்தில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்பது ஜித்தன் ரமேஷ்சை விசாரித்தால் தான் தெரியும்.

ramesh-cinemapettai
எனவே அடுத்த வாரம் கண்டிப்பாக கமல் இதைப்பற்றி ஜித்தன் ரமேஷ் இடம் கேட்டு ரசிகர்களுக்கு தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
