ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கீச் கீச்னு கத்தும் விஜய் சேதுபதி மகள்.. இது நீ இல்லமா.. இதுதான் இவருடையாம் வேலையாம்

விஜய் டிவியின் பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார் நடிகை சாச்சனா. மகாராஜா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற அவர் பிக் பாஸ் 8க்கு வந்திருக்கிறார். முதல் 24 மணி நேரத்திற்குள்ளே இவர் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் விஜய் டிவி prank செய்திருக்கிறார்கள். அடுத்த ஒருவாரத்திற்குள், மீண்டும் அவரை உள்ளே அனுப்பினார்கள்.

ஆனால் வந்த நாள் முதல் சாச்சனா செய்யும் அலப்பறை, பேசாம இந்த பொண்ண கூப்பிடாமலே இருந்திருக்கலாம்.. என்று ஆடையன்ஸை நினைக்கவைத்தது. குறிப்பாக பாத்திரம் கழுவுவதால் வந்த பஞ்சாயத்து, இவரை சண்டை போட வைத்தது. ஆனால் என்ன அதை யாருமே கவனிக்கவில்லை.. இவர் பாட்டுக்கு கீச் கீச் என்று கத்தி கொண்டிருந்தார்.

சாச்சனா பார்க்கும் வேலை..

பலரும் சாச்சனாவை இருபது வயது கூட நிரம்பாதவர் என்றே நினைத்திருப்பார்கள். ஏன் என்றால் அவர் தோற்றம் அப்படி. ஸ்கூல் படிக்கும் குழந்தையை போல இருப்பார். ஆனால் நிஜத்தில், இவருக்கு தற்போது 22 வயது ஆகிறது. மேலும் சோசியல் மீடியாவில், படு ஆக்டிவாக இருப்பவரும் கூட.

இவர் ஒரு ஐடி நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார். லீவு நாட்கள், மற்றும் ஒரு சில நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு வந்து படம் நடித்து கொடுப்பார்களாம். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விளையாடி வருகிறார்.

இவர் பேச கூடிய ஒரு சில விஷயங்கள் சர்ச்சையாக முடிகிறது. அந்த வகையில், வீக்கானவர்கள் என்று சமீபத்தில் இவர் ஒரு கருத்து தெரிவித்தது கூட, பலருக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள், ‘வயதிற்கு மீறிய பேச்சு’ என்றும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News