Connect with us
Cinemapettai

Cinemapettai

thala-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலையவே நக்கலடித்த பிக் பாஸ் பிரபலம்.. கொல காண்டில் பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக விளங்குபவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதன் காரணமாகவே இவருடைய ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்கள் விழாக்கோலம் போலவே காட்சியளிக்கும்.

அப்படி இருக்கும் இவரை, பிக்பாஸ் பிரபலம் ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக பேசியிருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஏனென்றால் பிக் பாஸ் சீசன்1ல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன்பின் பல படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா, சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பார்.

அதனால் ரசிகர்கள் அவ்வப்போது எழுப்பும் கேள்விக்கும் பதில் அளித்தும் வருவார். அப்படி ஒரு ரசிகர் ரைசாவிடம் “ உங்களுக்கு தல பிடிக்குமா? தளபதி பிடிக்குமா? என்று கேட்டபோது “எனக்கு மொட்ட தல தான் பிடிக்கும்” என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

இதனால் எரிச்சலான அந்த ரசிகர், அஜித் மொட்டை அடித்த படி இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டு, ‘இந்த தலையா?’ என்று கேட்டபோது அதற்கு ரைசா ‘very sharp’ என்று ட்வீட் செய்துள்ளார்.

இப்படி ரைசா, தல அஜித்தை  கிண்டலடித்த பேசியதன் மூலம் அவருடைய ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்.

raiza-twit

raiza-twit

Continue Reading
To Top