ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயர்பெற்று, பின்னர் பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த ஜூலி. ஆனால் பிக்பாஸ் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை விளம்பரம் மட்டுமே மிஞ்சியது. அந்த நிகழ்ச்சியில் அனைவர்க்கும் கடைசியில் கிடைத்தது அதுதான் ஓவியாவை தவிர. ஓவியா பல வகையில் கல்லா கட்டி வருகிறார். களவானி இரண்டாம் பாகத்தில் நடிக்கவே யோசித்தார். சரி ஜூலியை பற்றி வருவோம்.

anitha

ஜூலி பிக்பாஸ் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் அவருக்கு நிறைய படங்களிலும் மற்றும் சின்னத்திரையில் பல வாய்ப்புகள் நடித்து கொண்டிருக்கிறார். அவர் அம்மன் தாய் என்ற படத்தில் நடித்து அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதனை பார்த்து பலபேர் பயத்தில் இருந்து திரும்பாமல் இருந்தனர்.

தற்போது புதிதாக டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படம் இறந்துபோன அனிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் படம் எடுப்பதற்கு அனிதாவின் தந்தை மறுப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளார். ஒரு போராளியின் வாழ்கையை இவரை வைத்து படமெடுத்தால் கண்டிப்பா சிரிப்பான விஷயமாக மாறும்.

அனிதா தந்தை தொடுத்த வழக்கின் மூலம் ஜூலி மற்றும் படத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிதாவின் தந்தை அனுமதியின்றி படம் எடுப்பதால் அவர் மறுப்பு தெரிவித்து நஷ்ட ஈடு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரை பற்றி படமெடுத்தால் கண்டிப்பாக அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதனால் அனிதா வீட்டிற்கு உதவி செய்து பின்பு படமெடுத்து கல்லா கட்டி கொள்ளவும்.