fbpx
Connect with us

போங்கடா நீங்களும் உங்க பிக் பாஸ் ஷோவும்.. டாப்பிள இருந்தவரை இப்படி டப்புன்னு வெளியே தள்ளி விட்டீர்களே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போங்கடா நீங்களும் உங்க பிக் பாஸ் ஷோவும்.. டாப்பிள இருந்தவரை இப்படி டப்புன்னு வெளியே தள்ளி விட்டீர்களே!

அனுதினமும் சுவாரசியமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது ரசிகர்களை நாள்தோறும் பார்க்கத் தூண்டுகிறது.

அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில், சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பங்கு அதிகமாக இருந்தது

மேலும் மொட்ட சுரேஷ், அவ்வப்போது கொளுத்திப் போடுவதும் அதனால் பல சண்டைகள் உருவாக்குவதும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

எனவே தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேஷன் செய்ததற்கு பிக்பாஸ் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

அதில் குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ‘போங்கடா நீங்களும் உங்க கேம் ஷோவும்..’ என்று திட்டித் தீர்க்கின்றனர்.

அதைப்போல் ‘உங்க குசும்பு தான் உங்க பலம். ஆனால் நீங்க அது உங்க பலவீனம் நினைத்தது தான், நீங்க வெளியேற காரணம்’ என்று சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகனை விட சுரேஷ் சக்கரத்திற்கு பிக்பாஸ் ரசிகர்கள் உண்மையாகவே கண்ணீர் வடிக்கின்றனர்.

bigboss4-cinemapettai

bigboss4-cinemapettai

மேலும் “அடப்பாவிகளா., டாப்பிள இருந்தவரை இப்படி டப்புன்னு வெளியே தள்ளி விட்டீர்களே!” என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் தங்கள் கோபத்தை காட்டுகின்றனர்.

Continue Reading
To Top