புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முதல் வாரத்திலேயே மங்களம் பாடிய பிக் பாஸ்.. பேசாம வர்ஷினி மாதிரி property-யாகவே இருந்திருக்கலாம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இருப்பினும் contestant தேர்வு சரி இல்லாத காரணத்தினாலும் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் ஸ்வாரசியாமாக இல்லாத காரணத்தால் ஆரம்பம் முதலே காட்டுமொக்கையாக சென்றுகொண்டிருக்கிறது. வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர்.

முதல் வாரத்திலேயே மங்களம் பாடிய பிக் பாஸ்

சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரா வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அந்த வகையில், 6வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, ராணவ், ரஞ்சித், ரியா, சாச்சனா, சத்யா, சிவக்குமார், சொந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி ஆகியோர் இடம் பெற்றனர்.

இதில் வர்ஷினி வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் ப்ரின்சிபாலாக மாறி, கொஞ்சம் கன்டென்ட் கொடுத்து தப்பித்துவிட்டார் வர்ஷினி. மேலும் நாமினேஷன் பாஸ் வென்ற ஆண்கள் அணி தீபக்கை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றினர்.

இந்த நிலையில் வோட்டு கம்மியாக கிடைத்த வைல்ட் கார்டு கொண்டெஸ்டண்ட் ரியா தற்போது வெளியேறியுள்ளார். வர்ஷினி மாதிரி பேசாம property-யாகவே இருந்திருக்கலாம் போல..

கண்ணாடி முன்னாடி பேசி பேசி ஆடியன்ஸை கடுப்பேற்றியுள்ளார் ரியா. இவருக்கு இந்த பழக்கம் இன்ஸ்டாகிராமிலிருந்து தான் வந்திருக்கிறது. அவருடைய எந்த ரீல் பார்த்தாலும், முகத்தை 3x zooming-ல் வைத்தே எடுப்பார். இப்படி இருக்க தற்போது வெளியாகியுள்ளார்.

- Advertisement -

Trending News