fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் ஆரியின் மனைவி இந்த பட நடிகையா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஆரியின் மனைவி இந்த பட நடிகையா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகரும் இயக்குனருமான ஆரி, ‘நெடுஞ்சாலை’ , ‘மாயா’ என்ற படங்களின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர்.

இவர், மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் சவால் விடும் அளவுக்கு புத்திசாலித்தனமாக விளையாடி வருவதால், இவருக்கு பிக்பாஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இவருடைய திருமணம் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் நடித்து வெளிவராத முதல் படத்தின் கதாநாயகியை தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஆரி, தமிழ் வழி இலங்கை பெண்ணான நதியாவை 3 வருடம் காதலித்து அதன்பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும்  திருமணத்திற்குப் பிறகு நடிகர் ஆரி, நடிப்பது மட்டுமல்லாமல், சமுதாய நலன் கருதி நாட்டு விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யுமாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவருடைய குரல் ஓங்கி நின்றது.

இப்படி சமூக மாற்றங்களை ஏற்படுத்தத் துடிக்கும் ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை இளம்தலைமுறையினருக்கு வழிகாட்டியாக நேர்மையுடன் விளையாடுவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆரியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

aari-big-boss

aari-big-boss

மேலும் அவருடைய ரசிகர்களால் ஆரியின் திருமண புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top