fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பத்த வச்சிட்டியே பரட்ட, பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம்.! வைரலாகும் வீடியோ

bigg-boss-promo

Videos | வீடியோக்கள்

பத்த வச்சிட்டியே பரட்ட, பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம்.! வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் போட்டியாளர்கள் அனைவரும் பாட்டு, கதை என்று சந்தோஷமாக பொழுதை கழித்தனர். இன்றைய நாளுக்கான ப்ரோமோ சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களைப் பற்றி உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள 2-வது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி அமர்ந்துள்ளனர். நடிகர் ராஜு கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சந்தோஷமான முகத்தையே மக்களிடம் காட்ட வேண்டும் கஷ்டமான விஷயங்களை கூற கூடாது என்கிறார்.

மேலும் அவர் பாடகி சின்னப் பொண்ணுவிடம், உங்க பாடலை கேட்கும் போது வரும் ஃபீல், நீங்கள் இப்பொழுது சொன்ன கதையில் எனக்கு வரவில்லை. எல்லோரும் கைத்தட்டி சூப்பர் என்று சொன்னால் நாம் முன்னேற முடியாது நம்ம நடந்து போகும் போது எதிர்ல இருக்குற சுவர பார்த்தா அடிச்சு உடைக்கணும்னு தோணும்.

நான் உங்களுக்கு இப்ப அந்த சுவர் மாதிரி தான் தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறுகிறார். ராஜுவின் இந்த பேச்சினை கேட்டு அதிர்ந்த போட்டியாளர்கள் கோச்சிக்கிட்டியா என்று சின்ன பொண்ணு விடம் கேட்கிறார்கள்.

அவர் இல்லை என்று சமாளித்தாலும் அவர் முகத்தில் ஒரு வருத்தம் தெரிகிறது. இவ்வாறு இந்த ப்ரோமோ முடிகிறது. ராஜுவின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிக்கும் வகையில் உள்ளது.

இந்த ப்ரோமோவை பார்க்கும்போது இந்த வாரம் முழுவதும் சென்டிமென்ட் வாரம் என்று தெரிகிறது அடுத்த வாரம் இது அப்படியே தலைகீழாக மாறும் என்பது நாம் அறிந்த ஒன்றே.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top