ஜெய்பீம் படத்திற்கு ஆஸ்கார் வரை கிடைத்த அங்கீகாரம்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா

கடந்தாண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் இப்படத்திற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தது. ஆனால் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் வந்தது.

அதன்படி ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மறைமுகமாக தவறானவர்களாகவும், கொடுமைக்காரர்களாகவும் சித்தரித்துள்ளதாக கூறி தொடர்ந்து படத்திற்கு அடுக்கடுக்காக பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. நடிகராகவும் படத்தின் தயாரிப்பாளராகவும் சூர்யா பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது.

இருப்பினும் இத்தனை பிரச்சனைகளை தாண்டி வெளியான ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மக்களும் படத்திற்கு நல்ல ஆதரவு அளித்தனர். இந்நிலையில் தற்போது ஜெய் பீம் படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது அந்த படத்திற்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.

அதன்படி ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படம் குறித்த காட்சிகள் மற்றும் இயக்குனர் ஞானவேலின் விளக்கத்தோடு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. #SceneAtTheAcademy என்ற பெயரில் உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை உலக சினிமா ரசிகர்களுக்கு ஆஸ்கார் யூடியூப் சேனல் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

oscars-jaibhim
oscars-jaibhim

தற்போது அந்த வரிசையில் இதில் ஜெய் பீம் படத்தின் 12 நிமிட காட்சியை வெளியிட்டு, படத்தை பற்றியும் நீதியரசர் சந்துருவின் முயற்சிகள் பற்றியும் பாராட்டியுள்ளது ஆஸ்கர் விருதுகள் குழு. இது தமிழ் சினிமாவிற்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்