வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அஜித் படத்தைத் தவிர தயாரித்த எல்லாம் பிளாப்.. வெள்ளிவிழா நிறுவனத்திற்கு இப்படி ஒரு கஷ்ட காலம்

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது பெரும் சருக்கலில் தவித்து வருகிறது.1992 காலகட்டங்களில் பெரிய ஹீரோக்களை வைத்து அட்டகாசமான ஹிட் படங்களை கொடுத்தவர்கள் சத்தியஜோதி தயாரிப்பு நிறுவனம். பல தொலைக்காட்சி தொடர்களையும் வெற்றிகரமாக தயாரித்திருந்தனர்.

இப்பொழுது 2008க்கு பின் இவர்கள் ஹிட் கொடுக்கவே இல்லையாம், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் சத்யஜோதி நிறுவனம் தயாரித்த எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. அதற்கு அவர்களுடைய நிர்வாக திறமையை தான் அனைவரும் குறை கூறி வருகிறார்கள்.

1992 இல் மூன்றாம் பிறை படத்திலிருந்து தயாரிப்பை தொடங்கினார்கள் சத்தியஜோதி நிறுவனம். அப்பொழுது இதன் உரிமையாளர் தியாகராஜன். சத்திய ஜோதி தியாகராஜன் என்றால் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது அந்த அளவிற்கு இவர்கள் வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.

கிழக்கு வாசல், ஹானஸ்ட் ராஜ், எம்டன் மகன் என அடுத்தடுத்து நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள் சத்தியஜோதி நிறுவனம். ஆனால் இது சத்தியஜோதி தியாகராஜன் காலத்தோடு முடிந்தது அதன் பிறகு அந்த நிறுவனம் அவரின் வாரிசு அர்ஜுன் கைவசம் சென்றது. அப்போதிருந்தே பல சருக்கல்களை சந்தித்து வந்தது

எம் மகன் படத்திற்கு பிறகு பானா காத்தாடி, ஜெயம் கொண்டான் இந்த படங்கள் மட்டுமே ஓரளவுக்கு கை கொடுத்தது. அஜித்தை வைத்து எடுத்த விசுவாசம் படம் மட்டும் தான் அவர்களுக்கு ஹிட்டாக அமைந்தது. அதன் பின் தொடரி, சத்ரியன், பட்டாசு, மாறன், அன்பறிவு, வீரன், கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து ஃபெயிலியர் படங்கள் தான். இதற்கு காரணம் அந்த நிறுவனத்தினர் கதையை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான்.

- Advertisement -

Trending News