ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. வேதனையில் வெளியிட்ட உருக்கமான பதிவு

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரொனால்டோவிற்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. சென்ற வாரம் அவரது காதலியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

அவரது காதலி ஜார்ஜினாவுக்கு அண்மையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.ஆனால் ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தது.

இன்று அதிகாலை ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த எங்களது ஆண் குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாகவும், இதனால் நாங்கள் பெரும் துயரத்தில் இருக்கிறோம், அந்த துயரத்திலிருந்து விடுபட எங்கள் பெண் குழந்தை தான் எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவலை பதிவிட்டிருந்தார்.

Ronaldo1
Ronaldo1

எங்கள் குழந்தையை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.