fbpx
Connect with us

பெரும் சிக்கலில் மாட்டிய ராஜமௌலி.. இந்த இருவர் நினைத்தால் மட்டுமே மீள முடியும்

India | இந்தியா

பெரும் சிக்கலில் மாட்டிய ராஜமௌலி.. இந்த இருவர் நினைத்தால் மட்டுமே மீள முடியும்

இந்தக் கொரோனாவுக்கு பிரம்மாண்டம், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. சகட்டு மேனிக்கு அனைவரையும், அனைத்து தொழிலையும் அடிக்கிறதுதான் வேலை என்பது போல் உள்ளது. அதற்கு தகுந்தார்போல் ராஜமௌலிக்கு கொரோனா வழியாக ஒரு சிக்கல் வந்துள்ளது. அதுவும் இரண்டு பெரிய பிரபலங்கள் மூலம்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் அனைத்தும் நின்றது. இந்நிலையில் ராஜமவுலியின் RRR படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர்கள் தற்போது பணத்தை திரும்ப கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்களாம். என்னதான் பெரிய இயக்குனராக இருந்தாலும் தற்போது நிலவி வரும் சூழ்நிலை அனைவரையும் அசைத்துப் பார்த்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க,

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகை ஆலியா பட். மற்றொரு நாயகி லண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஆங்கிலேயே இளவரசியாக நடிப்பதற்காகத்தான் லண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் நடித்திருந்த ‘7 ட்ரையல் 7 டேய்ஸ்’ தொடரில் இவர் நடிப்பை பார்த்து வியந்து இந்தப் படத்தில் நாயகியாக்கினார் ராஜமௌலி.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒலிவியா, கொரோனா பிரச்சனையால் இந்த ஆண்டு தன்னால் இந்தியா வரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். அடுத்து ஆலியா பட், அடுத்தடுத்து இந்திப்படங்களில் நடிப்பதற்காக கொடுத்த தேதிகள் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறி ராஜமௌலிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்து உள்ளார்.

அவர்கள் இல்லையென்றால் இதுவரை எடுத்த படமும் வேஸ்ட் ஆக போய்விடும் இனி என்ன பண்ணுவது என்று தெரியாமல் அவர்கள் இல்லாத காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி.

Continue Reading
To Top