செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சொந்த மண்ணில் படுதோல்வி.. கம்பீர், ரோஹித்தை வைச்சு செய்த BCCI

சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான விளையாடி வாஸ் அவுட்டான இந்திய அணிக்கு கடும் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் பிசிசிஐ ஹெவி டோஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் டாப்பில் உள்ள இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து சொந்த ஊரிலேயே படுதோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலாவது வென்று ஆறுதல் வெற்றி கூட பெறவில்லை என்பது ரசிகர்களுக்கும் ஏமாற்றை ஏற்படுத்தியுள்ளது.

இது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்வதில் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நடைபெற்ற டெஸ்ட்டின் அடிப்படையில் அணியைப் பற்றி பிசிசிஐ அமைப்பு ஒரு மதிப்பாய்வு செய்தது.

பிசிசியின் ஆலோசனை கூட்டம்

அதில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, கம்பீரின் பயிற்சி முறை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மதிப்பாய்வுக் குழு கூட்டம் 6 மணி நேரம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இதில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் ஆன்லைன் மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, டெஸ்ட் தொடரின் போது அணி நிர்வாகம் எடுத்த முடிவு பற்றி அனைவரும் விவாவித்தனர். வீரர்கள் தேர்வு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக டி 20 உலகக் கோப்பை வரை இந்திய அணி டிராவிட்டின் தலைமையின் கீழ் விளையாடிவிட்டு, இப்போது கம்பீர் தலைமையின் கீழ் புதிதாக விளையாடுவது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா, கம்பீரிடம் சரமாறி கேள்வி

அதேசமயம், சுழல்பந்து வீச்சு கைகொடுக்காத நிலையில், வேகப் பந்துவீச்சாளார் பும்ராவின் தேவை பற்றியும், தோற்கடிப்பட்ட பின்னும், ஏன் ரேங்க் டர்னரை தேர்வு செய்தது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதேசமயம், இத்தோல்விக்கு என்ன நடவடிக்கை இனி மேற்கொள்வது என்பது பற்றி ஆலோசனை வழங்கும்படி கம்பீர், அஜித் அகர்கர். ரோஹித் சர்மாவிடம் பிசிசிசி தலைமை கூறிய நிலையில், அவர்கள் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிபோது அணியை சீரமைப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பயிற்சியாளர் கம்பீர் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், அணியை அடுத்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறச் செய்து டெஸ்ட் உலக சாம்பியன் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பெரிய பொறுப்பும் அவருக்கு உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News