சிவாஜி நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான ஒரே திரைப்படம்.. பல கோடிகளை குவித்து செய்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை!

60, 70களில் தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. இப்போது இருப்பது போல நவீன தொழில்நுட்பம் அந்த காலகட்டத்தில் இல்லை என்றாலும் பலரும் வியக்கும் படியான படங்கள் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்போது 100 கோடி பட்ஜெட் படங்கள் என்றால் அது சாதாரணம்.

ஏன் பெரிய நடிகர்களின் சம்பளமே தற்போது 100 கோடிக்கு அதிகமாக உள்ளது. ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலே அது மிக பெரிய விஷயம். அந்த வகையில் சிவாஜின் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் ஒரு படம் வெளியாகி இருந்தது.

Also Read :பெண் வேடத்தில் நடித்த எம்ஜிஆர், சிவாஜி.. புகைப்படத்தை பார்த்து பெண்களே பொறாமை படும் அழகு

சிவாஜி தனது திரை வாழ்க்கையில் நடித்த திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமும் அதுதான். அதாவது சிவாஜின் 200வது படம் தான் திரிசூலம். இப்படத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்திருந்தார். மேலும் கே ஆர் விஜயா, ஸ்ரீபிரியா, ரீனா போன்ற நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

திரிசூலம் படத்தில் நம்பியார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன் தயாரித்திருந்தது. திரிசூலம் படம் கிட்டத்தட்ட 65 லட்சம் பட்ஜெட்டில் அப்போதைய காலகட்டத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.

Also Read :செம டோஸ் விட்ட சிவாஜி.. எவ்வளவு சொல்லியும் கமலை விரட்டிய நடிகர் திலகம்

மேலும் இப்படம் 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இருவதற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான திரிசூலம் படம் 8 திரையரங்குகளில் வெள்ளிவிழாவை கடந்தது. மொத்தமாக இப்படம் 3 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

திரிசூலம் படம் வெளியாவதற்கு முன்பு 1973 இல் வெளியான எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் தான் வசூலில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சிவாஜியின் திரிசூலம் வெளியாகி உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை முறியடித்தது.

Also Read :தமிழ் சினிமா வரலாற்றில் முதல் டபுள் ஆக்சன் ரோல்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே அசத்திய ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்