Tamil Cinema News | சினிமா செய்திகள்
படு கேவலமாக மாமா வேலை பார்க்கும் பிக் பாஸ் வீடியோ.. பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு போல!
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இரண்டாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் பிக் பாஸ் 4 தொடங்கியதிலிருந்து இதுவரை எந்த காதல் ட்ராக்கும் ஆன் ஆகாமல் இருந்தது. ஆனால் தற்போது கேபி மற்றும் பாலாஜி முருகதாசுக்கு இடையில் ஏதேனும் தொடங்கியிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கேபி.
மேலும் இந்த இரண்டு வாரங்களில் அனிதா சம்பத்- சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி- பாலாஜி முருகதாஸ் ஆகியோரின் பிரச்சனைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் சற்று ஏமாற்றத்தில் உள்ள பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கமல் கடந்த வாரம் சில பஞ்சாயத்துகளை செய்துள்ளார்.
அந்த வகையில் கேப்ரில்லா லீடர்ஷிப் போட்டியில் பங்கேற்றபோது அவருடைய நண்பர்கள் யாரும் கூட நிற்கவில்லை என்று பாலாஜியை பற்றி மறைமுகமாக கமல் பேசியதற்கு, சிவந்த முகத்துடன் தனது வெட்கத்தை வெளிப்படுத்தி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார் கேப்ரில்லா.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியையும் கேபியையும் இணைத்து, பாலாஜி கேபிக்கு காதல் ரூட்டு போடற மாதிரி ஒரு ப்ரோமோவை போட்டுத் தாக்கினார் பிக் பாஸ்.
இவ்வாறிருக்க தற்போது கேப்ரில்லாவின் செயல் பிக்பாஸ் 4 வீட்டில் காதல் ட்ராக் தொடங்கிருச்சோ என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வரவிருக்கும் நாட்களில் காதல் காட்சிகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
