Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாஸ்க்னு சொல்லிட்டு கொளுத்தி விட்ட பிக் பாஸ்.. வேலியில் போற ஓணானை வேட்டியில் விட்ட மொட்ட அங்கிள்!
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். மேலும் தற்போது இந்த ஷோ தான் சமூக வலைதள வாசிகளுக்கு ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
ஏனெனில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மக்கள் எதிர்பார்த்ததையும் தாண்டி படுபயங்கரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் இதில் ஹைலைட்டே மொட்ட பாஸ் தான். ஏனென்றால் தினசரி சுரேஷுடன் நாள்தோறும் யாருக்காவது ஏதாவது ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டுவிடுகிறது. அந்தவகையில் நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் படு ஆவேசமாக பேசியுள்ளார் பாடகர் வேல் முருகன்.
மேலும் நேற்று ‘எலிமினேஷன் பிரீ பாஸ்’ என்று ஒரு புதிய உத்தியை போட்டியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வம்பை இழுத்துவிட்டனர் பிக்பாஸ் குழுவினர். அதாவது கடைசியாக எழிமினேஷன் லிஸ்டில் இருந்த எட்டு பேரை இருட்டு அறையில் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது இந்த நிகழ்ச்சி.
இவ்வாறு இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 பேரும் பேசிக் கொண்டிருந்ததில் நடிகர் சுரேஷ் பேசியதை மட்டும் மற்ற போட்டியாளர்களுக்கும் லிவ்விங் ரூமில் உள்ள டிவியில் லைவ் டெலிகாஸ்ட் பண்ணி பயங்கரமா வீட்டுக்குள்ள கொளுத்தி போட்டுட்டாரு பிக்பாஸ்.
இதைத்தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த சுரேஷ், வேல்முருகனுக்கு அளித்த வேட்டியை பற்றி பேசி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.
இந்நிலையில் சுரேஷிடம் வேல்முருகன் ‘வேட்டி கொடுத்தத ஏன் கேவலமா பேசுறீங்க’ என்று ஆவேசமாக பேசுகிறார். ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காத சுரேஷ் ‘நான் அப்படி சொல்லல’ என்று கூறி, கூலா சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சுட்டாரு.
இவ்வாறு கூலா போன சுரேஷ் பிக்பாஸ் இடம் ‘கடைசியா பத்த வச்சுட்டியே பரட்ட’ என்ற டயலாக்கை கூறி எபிசோடை தெறிக்க விட்டிருக்கிறார்.
இனிமேல் சுரேஷ் எப்படி இந்த பிக் பாஸ் ஹவுஸ்ல சர்வே பண்ணுறாரு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
