fbpx
Connect with us

Cinemapettai

பேரை கெடுத்துக் கொள்ளும் அனிதா சம்பத்.. புரளி பேசும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேரை கெடுத்துக் கொள்ளும் அனிதா சம்பத்.. புரளி பேசும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கி இன்று நான்காவது நாள் ஒளிபரப்பாகிய நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே அனிதா சம்பத்திற்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்த  ப்ரோமோவில் அனிதா சம்பத்தை கதற விட்டுள்ளனர் பிக்பாஸ் குழுவினர்.

மேலும் அந்த ப்ரோமோவில் அனிதா, ‘நான் கஷ்டப்பட்ட நல்ல பெயர் வாங்கி இருக்கேன். அந்த பெயரை கெடுக்க விரும்பல. என்னை யாரோடையும் கம்பேர் பண்ணாதீங்க. இதுவரைக்கும் எனக்கு ஒரு  அட்ரஸ் இல்ல. இதுவரைக்கும் லெட்டர்ல கூட நான் வேற ஏதோ ஒரு அட்ரஸ் தான் குடுத்து இருக்கேன்’ என தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.

அதனை அடுத்து பேசிய அவர், ‘எங்க வீட்ல நான் தான் அம்மா மாதிரி. என்னுடைய அப்பா, அம்மா, தம்பி, தங்கை எல்லாரும் எனக்கு பிள்ளைங்க மாதிரிதான்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோவை பார்த்த அனிதா சம்பத்தின் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

Continue Reading
To Top