திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அடுத்த நபர்.. அம்மாடியோ! பெரிய வாயாடி ஆச்சே

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாளை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் தொகுத்து வழங்குவார். அவ்வாறு அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒரு நபரை மக்கள் அளித்த குறைந்த ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றுவார்கள்.

அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் தாமரைச்செல்வி, நிரூப், சதீஷ், அனிதா சம்பத், சுருதி, ஜூலி ஆகிய ஆறு பேரில் ஒருவர் எலிமினேட் ஆகப் போகின்றனர். எனவே நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் இந்த ஆறு பேரில் அனிதா சம்பத் அல்லது சுருதி இருவருள் ஒருவர்தான் வெளியேறப் போகின்றனர்.

மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் ஆகவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தால் சுருதி மற்றும் அனிதா சம்பத் இருவரும் வெளியேற போகின்றனர். ஏனென்றால் சுருதியை பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

ஏனென்றால் தாமரையிடம் சுருதி தவறான முறையில் நாணயத்தை அபகரித்தால், அப்பொழுது இருந்தே ரசிகர்களுக்கு சுருதியை பிடிக்கவில்லை. இருப்பினும் அவருடைய தைரியமான விளையாட்டு ஒருசில ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அதேபோன்றுதான் அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருந்ததைவிட மிகவும் வித்தியாசமாக கெட்ட வார்த்தை அதிகம் பயன்படுத்தும் போட்டியாளர் ஆகவும் இருந்து கொண்டிருக்கிறார்.

இதனால் இவர்கள் இருவரும் ரசிகர்களின் மனதை கவர தவறியதால் அவர்களிடமிருந்து குறைந்த ஓட்டுக்களை பெற்ற காரணத்தினால் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகின்றனர். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் வேறு யாரும் எலிமினேட் ஆகின்றார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News