fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விட்டதை பிடிக்க வீட்டுக்குள்ள வரப்போறாங்க.. வெளியான பிக் பாஸ் அல்டிமேட் அசத்தல் புரோமோ!

kamal-hotstar-promo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விட்டதை பிடிக்க வீட்டுக்குள்ள வரப்போறாங்க.. வெளியான பிக் பாஸ் அல்டிமேட் அசத்தல் புரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இவ்வளவு நாட்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் இனி இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாது என்று மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விதமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த செய்தி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளது.

இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான புரோமோ ஒன்று வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது. அதில் புதிதாக உருவாக்கப்படும் பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் நுழைந்து அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் பேசுகிறார்.

வீடு அப்படியே இருக்கட்டும் ஆனால் சுவரின் உயரம் பத்தாது இன்னும் தூக்கி கட்டுங்கள் என்று சொல்கிறார். ஏனென்றால் பாட்டுக்கு ஆடும் காலையும் பார்த்திருக்கிறோம், சுவரை தாண்டும் ஆளையும் பார்த்துள்ளோம் என்று கடந்த சீசன் பரணியை நினைவுபடுத்துகிறார்.

மேலும் இப்ப வரப்போறவங்க வத்தியும் வெச்சிருக்காங்க, வீட்டையே பத்தவும் வச்சிருக்காங்க என்று வத்திகுச்சி வனிதாவை பற்றி கூறுகிறார். விட்டதை பிடிக்க வீட்டுக்குள்ள வரப்போறாங்க, அதை விடாமல் மல்லு கட்டப் போறாங்க, இதை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் காட்ட போறாங்க என்று சுவாரஸ்யமாக கூறுகிறார். வைரல் ப்ரோமோ

தொலைச்ச இடத்துலதான் தேட முடியும், அதுபோல தோற்ற இடத்தில் தான் ஜெயிக்க முடியும் என்ற அட்டகாசமான பஞ்ச் டயலாக்கோடு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்துகிறார். தற்போது இந்த ப்ரோமோ அனைவரிடமும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top