ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் வெளியேற போவது இவர்தான்.. எதிர்பாராமல் முதலிடத்தில் அந்த நபர்

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டோரில்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு ஒரு வாரத்தை நிறைவு செய்யவுள்ளது. எனவே இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அனிதா, வனிதா, அபினை, சுரேஷ் சக்கரவர்த்தி, சுருதி, சினேகன், நிரூப், ஜூலி இவர்களில் மக்கள் அளித்த வாக்கில் அடிப்படையில் குறைந்த ஓட்டுகளை பெறும் நபர் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

எனவே இன்று மற்றும் நாளை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று யார் வெளியிடப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்.

இருப்பினும் அதற்கு முன்பே தற்போது இணையத்தில் வெளியாகும் ஓட்டிங் லிஸ்ட் அடிப்படையில் தெரிந்துவிட்டது. ஏனென்றால் இதில் லிஸ்டில் கடைசி இடத்தைப் பிடித்த அபினை இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து எலிமினேட் ஆக உள்ளார்.

இவர் ஏற்கனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே குறைந்த ஆதரவை மட்டுமே பெற்றவர். இருப்பினும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் மிகுந்த நபராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

இதனால் இந்த வீட்டின் சுவாரஸ்யம் குறைந்த நபராக கருதி அபினை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக ரசிகர்கள் வெளியேற்ற உள்ளனர். எனவே இந்த ஓட்டிங் லிஸ்டில் முதலிடத்தில் நிரூப் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் அனிதாவும், சுருதி, சினேகன், ஜூலி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். அதன்பிறகு வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினை ஆகியோர் கடைசி மூன்று இடத்தை பிடித்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News