Tamil Cinema News | சினிமா செய்திகள்
அர்ச்சனாவை விட சர்ச்சையான பிரபலத்தை களமிறங்கும் பிக் பாஸ்.. ஒயில் கார்டு என்றியில் மிரள போகும் ஹவுஸ் மேட்ஸ்!
விஜய் டிவியில் நாள்தோறும் சுவாரசியம் குறையாமல் மக்களை பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன்4 மாறிவிட்டது.
அதற்கேற்றார் போல் ஒவ்வொரு நாளும் வெளியாகும் புரோமோ வீடியோவும் மக்களை சுண்டி இழுக்கிறது. அந்த அளவிற்கு சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் 2-வது ஒயில்கார்டு கன்டஸ்டன்ட்ஸ்சை களமிறக்க பிக்பாஸ் முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே அர்ச்சனாவை சில நாட்களுக்கு முன்பு ஒயில்கார்டு கன்டஸ்டன்ட்ஸ்சாக பிக் பாஸ் வீட்டில் நுழைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே.
அவர் வீட்டிற்குள் சென்ற பின்பு மொட்டையின் கொட்டம் அடங்கி உள்ளதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலே கருத்து தெரிவித்திருந்தார்.
அப்படி இருக்க தற்போது 18-வது போட்டியாளராக பாடகி RJ சுஜித்ரா களமிறங்கப் போவதாக சமூக ஊடகங்களின் வாயிலாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் இந்தத் தகவலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் ஏற்கனவே பிரபலங்களின் பலான புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட்டை மிரட்டியவர்.

susi-leaks
