புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வர்ஷினியை நங்கு-ன்னு கொட்டிய நாலு Contestants.. சொல்லவும் முடியல மெல்லவும் முடியல

புது வரவுகள் வந்த பின் ஆரம்பத்தில் டல் அடித்தாலும், தற்போது பிக் பாஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய தினம் முக்கியமாக 2 டாஸ்குகள் வைக்க பட்டது. அதில் ஒன்று contestants-க்கு பட்டப்பெயர் வைக்கவேண்டும். மற்ற ஒன்று மொட்டை கடிதாசி. இந்த இரண்டு டாஸ்கிளும் கிடைத்த கேப்பில் எல்லாம் கொட்டு வைத்துள்ளார்கள் contestants.

இந்த வாரம் இவர் நிம்மதியாக இருந்தாலும், அடுத்தவாரம், பெண்களே இவரை துரத்த வரிந்து கட்டி வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன் என்றால் இவர் இதுவரை காபி அடிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பது தான் அங்கு உள்ள contestant-களின் கருத்து..

அழகா இருந்தா மட்டும் போதுமா?

பட்ட பெயர் வைக்கும் டாஸ்க்கில், வர்ஷினியை முதலில் தர்ஷிகா விளாசி எடுத்திருந்தார். அதாவது, Care-Free கந்தசாமி என்று கூறியிருந்தார். அவர் அப்படி சொன்னதுக்கு காரணம், வீடே பற்றி எரிந்தாலும், எதை பற்றியும் கவலைப்படாமல், அணிக்காக விளையாடாமல் வேடிக்கை பார்க்கிறாராம்.

இவர் ஒரு கொட்டு வைத்தபின், அடுத்ததாக சுனிதாவும் ஒரு கொட்டு வைத்துள்ளார். அதுவும் நங்குன்னு வைத்துள்ளார். வர்ஷினி முகம் சொல்லவும் முடியல மெல்லவும் முடியல என்பது போல இருந்தது. அடுத்து வந்த சுனிதா, வர்ஷினிக்கு காலி திமாக் என்று பேர் வைத்துள்ளார். அப்படியென்றால் மேல் மாடி காலி என்று அர்த்தமாம்.

மூளை சுத்தமா இல்லை என்று கூறியிருக்கிறார். கோவத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற வர்ஷினி, சிரித்த முகத்தோடு திறந்து பார்த்தீர்களா என்ன என்று கேட்டார். ஆனால் சுனிதா, “அதுக்கு தேவை இல்ல.. activities ல தெரியுது ” என்று சொல்லி ஆஃப் செய்து விட்டார்.

அடுத்து வந்த ஜாக்குலின், கார்பன் பேப்பர் என்ற பட்டப்பெயரை வைத்துள்ளார். அதாவது, இவர் சௌந்தர்யா போல இருக்க முயற்சி செய்கிறாராம். ஆனால் அது நன்றாக இல்லை என்று அசிங்கப்படுத்திவிட்டு போய்ட்டார். என்ன இன்னிக்கு ஓவரா பொளக்குறாங்க என்பதை போல தான் அவர் முகம் இருந்தது.. இதை தொடர்ந்து ரசிகர்கள், அழகா இருந்தா மட்டும் போதுமா? ஏதாவது பண்ணு மா.. என்று கமெண்ட் செய்கிறார்கள்…

- Advertisement -

Trending News