Connect with us
Cinemapettai

Cinemapettai

18 வருடமாக பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய தனுஷ்.. புலம்பித் தவிக்கும் பிக்பாஸ் பிரபலம்

dhanush-44

Tamil Cinema News | சினிமா செய்திகள்

18 வருடமாக பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய தனுஷ்.. புலம்பித் தவிக்கும் பிக்பாஸ் பிரபலம்

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷெரின். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஆபாச காட்சிகள் வந்தாலும் கூட மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இதற்கு பின்னர் விஜய் டிவி பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் அறிமுகமாகி பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அப்போதும் தமிழ் சினிமா அவரை கைவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இதற்காக தனது உடல் எடையை 18 லிருந்து 20 கிலோ வரை குறைத்தும் பார்த்து விட்டார். விதவிதமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது வாய்ப்புகளை தட்டிப் விடலாம் என்று எண்ணத்தில் மண்ணை வாரி போட்டது தான் மிச்சம்.

இதைத் தவிர ஏற்கனவே தொடர்பில் இருந்த தனுஷ் பட வாய்ப்பு தருவதாக முன்னதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம். ஆனால் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஷெரின்.

ஹாலிவுட் வரை சென்றுவிட்டதால் தனுஷ் தற்போது ஷெரினை கண்டுகொள்வதில்லை என்று ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

sherin

sherin

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top