fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

என் நெத்தியில இளிச்ச வாயினு ஓட்டிருக்கா.. குடுமிப்பிடி சண்டையில் பிரியங்கா – தாமரை!

big-boss-priyanga-cinemapettai

Videos | வீடியோக்கள்

என் நெத்தியில இளிச்ச வாயினு ஓட்டிருக்கா.. குடுமிப்பிடி சண்டையில் பிரியங்கா – தாமரை!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னிலையில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதனால் போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் நிரூப், டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு இன்று நடக்கும் போட்டியில் கொடுக்கப்படும் முட்டைகளில் யார் தங்களது முட்டைகளை உடைக்காமல் கடைசிவரை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவிக்க, மற்றவர்களின் முட்டையை உடைக்க அடிபிடி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு கைகலப்பில் ஈடுபடுகின்றனர். அதன்பின் பிரியங்கா பாவனியிடம், ‘தாமரை அடிக்கடி என்னுடன் முறைத்துக்கொண்டு இருப்பதற்கு, என் தலையில் இழிச்சவாய் என்ன ஓட்டிருக்கா, இனிமேல் தாமரையுடன் நான் பேசமாட்டேன்’ என்று கூறுகிறார்.

எனவேதற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோவின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அத்துடன் இந்த வாரம் துவங்கிய இரண்டாவது நாளே காரசாரமான விவாதம்துடன் போட்டியாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக விளையாடுவது மேலும் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை தூண்டி உள்ளது.

இன்னும் மூன்றே வாரத்தில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்று தெரிந்துவிடும் என்பதால் போட்டியாளர்களும் தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போட்டிபோட்டு முன்னேறி கொண்டிருக்கின்றனர். எனவே இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கிங் மூலம் யார் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு போக உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதோ இந்த ப்ரோமோ!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top