4,5வது இடத்தை பிடித்த பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்கள்.. ஸ்டேட்டஜி மன்னனுக்கு வச்ச ஆப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி துவங்கப்பட்டு, இன்றுடன் 106 நாட்களை நிறைவு செய்ய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவக்கப்பட்ட இந்த சீசனில் நிரூப், பாவனி, ராஜு, பிரியங்கா, அமீர் ஆகிய 5 பேர் கட்டத்தை எட்டி உள்ளனர். எனவே கிராண்ட் ஃபினாலேவிற்கு சென்ற டாப் 5 போட்டியாளர்களுள் அமீர், சிபி உடன் கடுமையாக போட்டியிட்டு கிராண்ட் பினாலேவிற்கு முதல் ஆளாக தேர்வானார்.

அவரைத் தொடர்ந்து இதுவரை நடந்து முடிந்த எந்த சீசனிலும் பிக்பாஸ் அளிக்காத வாய்ப்பினை இந்த சீசன் போட்டியாளர்களுக்கு அளித்து, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களால்நிரூப் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு கிராண்ட் ஃபினாலேவிற்கு இரண்டாவது பைனல் லிஸ்ட் ஆக தேர்வானார். இந்த சூழலில் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் ராஜு, பிரியங்கா, பாவனி ஆகிய மூன்று பேர் கிராண்ட் ஃபினாலேவிற்கு டாப் 5 போட்டியாளர்களாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து தற்போது கடைசி இரண்டு இடத்தை பிடித்தவர்கள் யார் என்ற தகவல் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் ஓட்டின் அடிப்படையில் தேர்வு ஆகாத அமீர் இருவரும் கடைசி இரண்டு இடத்தை பிடித்திருக்கின்றனர். இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே கடுமையான போட்டியாளராக கருதப்படும் நிரூப் பிக்பாஸ் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு டாஸ்கையும் வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து தனக்கென ஒரு ஸ்டேட்டஜியை உருவாக்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

தொடக்கத்தில் யாஷிகாவின் எக்ஸ் பாய்பிரெண்ட் என ரசிகர்களுக்கு அறிமுகமான நிரூப் அதன் பிறகு விளையாட்டில் தொய்வு ஏற்பட்டு பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் அவருடைய வித்தியாசமான விளையாடினால் தான் கிராண்ட் பினாலே வரை வர முடிந்தது. அதன் காரணமாக  18 போட்டியாளர்களில் தற்போது டாப் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இன்று எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

இவரைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக டான்ஸ் மாஸ்டர் அமீர் பிக்பாஸ் வீட்டில் 50-ஆவது நாளில் என்ட்ரி கொடுத்தாலும், இந்த விளையாட்டில் விறுவிறுப்பை கூட்டியது டன் ரசிகர்கள் எதிர்பார்த்த காதல் டிராக்கையும் ஓரளவு ஓட்டினார்.

ஆனால் பாவனி இதற்கு கொஞ்சம் ஒத்துழைக்காததால் அந்த ட்ராக் பாதியில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு ரசிகர்களை கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளியில் இருந்து கற்றுக்கொண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த அமீர் இந்த சீசனின் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்