Connect with us
Cinemapettai

Cinemapettai

விஷ பாட்டில், சிம்பிளி வேஸ்ட் பட்டத்தை வென்ற போட்டியாளர்கள்.. கோவத்தில் கொக்கரித்த இசைவாணி

bb5-niroop-akshara-isaivani

Videos | வீடியோக்கள்

விஷ பாட்டில், சிம்பிளி வேஸ்ட் பட்டத்தை வென்ற போட்டியாளர்கள்.. கோவத்தில் கொக்கரித்த இசைவாணி

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த விழாவில் நேற்றைய நிகழ்ச்சியில் சிறந்த என்டர்டைன்மென்ட் விருது ராஜுவுக்கும், சிறப்பாக ஆடை அணிபவர்கள் விருது அக்ஷராவுக்கு, விளையாட்டை சிறப்பாக விளையாடுபவர் என்ற விருது நிரூப் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விருது என்ற பெயரில் போட்டியாளர்களுக்கு செம பல்பு கொடுக்கும் எதிர்மறையான விருதுகளும் பிக்பாஸ் வைத்திருக்கிறார். அதை இன்றைய நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும். ஆகையால் அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

இதில் பிக்பாஸ் வீட்டின் ‘விஷ பாட்டில்’ என்ற கிரீடத்தை பாவனி அக்ஷராவிற்கும் வழங்கினார். அதன் பிறகு விளையாட்டை சிறப்பாக விளையாடிய நிரூப்பிற்கு ‘சிம்ப்ளி வேஸ்ட்’ என்ற பட்டத்தை வழங்கியதற்கு பாவனியிடம் கடுமையாகப் பேசினார் நிரூப்.

அத்துடன் இமான் அண்ணாச்சி இசைவாணிக்கு ‘தொட்டாசினிங்கி’ என்ற கிரீடத்தை கொடுத்தார். ஆனால் இசைவாணி அந்த கிரீடத்தை தலையில் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

இவ்வாறு காரசாரமாக நடந்த ப்ரோமோ வீடியோவானது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற விட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top