Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் வீட்டின் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி உறுதி.. கவர்ச்சியில் ஷிவானியை ஓரம் கட்ட போகும் பிரபலம் யார் தெரியுமா.?

bigg-boss-4-team

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டின் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி உறுதி.. கவர்ச்சியில் ஷிவானியை ஓரம் கட்ட போகும் பிரபலம் யார் தெரியுமா.?

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜித்ரா, சனம் ஷெட்டி ஆகிய 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு மீதம் 12 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களுக்குப் போட்டியாக தற்போது புதிதாக ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது பிக்பாஸ் ரசிகர்கள் மகேஸ்வரியிடம் “நீங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் போவது சாத்தியமா?” என்ற கேள்விக்கு பதிலாக “இன்னும் ஒரு சில தினங்களில் ஆச்சரியமான செய்தி வெளிவரும்” என்று  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று அவர் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஷிவானியின் ரீல் ஜோடியான சீரியல் நடிகர் அஸீம் பிக்பாஸ் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கவிருந்த நிலையில், அவருடைய தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்படவே அவரது வருகை தாமதமாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

vj-maheswari-cinemapettai

vj-maheswari-cinemapettai

எனவே தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் மகேஸ்வரிக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரை பிக் பாஸ் வீட்டில் அனுப்புவதற்கு விஜய்டிவி முடிவெடுத்ததாக தகவல்கள் கசிகிறது.

ஆகையால் சீரியல் நடிகர் அஸீம் மற்றும் தொகுப்பாளினி மகேஸ்வரி ஆகிய இருவரில் யார் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top