Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வாரம் ரெடியான தரமான நாமினேஷன் லிஸ்ட்.. நாட்கள் நெருங்க நெருங்க நெருப்பாய் வேலை செய்யும் பிக் பாஸ்
விஜய் டிவியின் டிஆர்பியை தற்போது வரை காப்பாற்றி வருவது பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய சுவாரஸ்யத்தை கூட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டு வருகிறது.
மேலும் வாரவாரம் திங்கட்கிழமையானவே பிக்பாஸ் முதல் வேலையே நாமினேஷன் லிஸ்ட் ரெடி செய்வது தான். அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான நேற்று பிக்பாஸ் வீட்டில் நேரடியாக நாமினேஷன் நடைபெற்றது. ஆனால் மற்ற நாமினேஷன்களைக் காட்டிலும் இந்த வாரம் சற்று மாறுபட்டதாகவே இருந்தது.
ஏனென்றால் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைமுகமாக நடைபெற்ற எவிக்சன் ப்ராசஸ் தற்போது நேர்முகமாக ஒளிவுமறைவின்றி அனைவர் முன்னிலையிலும் நடைபெற்றது.
எனவே இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றவர்கள் யார் யார் என்றால்,
- ஆரி
- ஆஜித்
- ஷிவானி
- அர்ச்சனா
- அனிதா
- சோம் சேகர்
- ரியோ
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தடவை தான் தரமான நாமினேஷன் லிஸ்ட் ரெடியாகி உள்ளது. ஏற்கனவே அர்ச்சனா அண்ட் கோ-வில் இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரமும் அர்ச்சனா குரூப்பிசத்திலிருந்து ஆட்கள் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.

kamal-bigg-boss-house-4
